JavaScript is required

எப்படி, மற்றும் எப்போது சேர வேண்டும் (How and when to enrol) - தமிழ் (Tamil)

சேர்க்கைச் செயல்முறை பற்றி உங்கள் உள்ளூராட்சி மன்றத்தில் அல்லது மழலையர் பள்ளிச் சேவையிடம் பேசுங்கள். நீங்கள் மூன்று-வயதினருக்கான மழலையர் பள்ளி விசாரணை அழைப்பை 1800 338 663 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம் அல்லது 3YO.kindergarten@education.vic.gov.au என்ற முகவரிக்கு மின்னஞ்சலும் செய்யலாம். உங்கள் மொழியில் உதவி பெற அல்லது உரைபெயர்ப்பாளரைப் பெற, முதலில் 131 450 என்ற எண்ணை அழைக்கவும்.

ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளி (ESK)

அகதியர் அல்லது புகலிடம் கோருவோர் பின்னணியில் இருந்து வந்துள்ள குழந்தைகள் கூடுதல் உதவிகளைப் பெறலாம், அத்துடன் ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளி மூலம் மழலையர் பள்ளிக்குச் செல்வதற்கான முன்னுரிமையைப் பெறலாம். நீங்கள் உங்கள் குழந்தையைப் பதிவு செய்யும் போது, உங்கள் உள்ளூர் சேவையில் ஆரம்ப கால மழலையர் பள்ளியைப் பற்றி நீங்கள் கேட்கலாம் அல்லது மேலும் தகவல்களுக்கு ஆரம்பகால தொடக்க மழலையர் பள்ளிக்குச்செல்லலாம்.

எப்போது பதிவு செய்ய வேண்டும்

விக்டோரியாவில், குழந்தைகளுக்கு 3 வயது ஆகும்போது, அவர்களைக் குழந்தைகள் திட்டம் ஒன்றில் சேர்க்கலாம். உங்கள் குழந்தையின் பிறந்த தேதியை தொடக்க வயதுக் கணிப்புப் பொறியில் உள்ளிட்டு, அவர்கள் எந்த ஆண்டில் மூன்று மற்றும் நான்கு வயது மழலையர் பள்ளி அல்லது முன்-தயாரிப்பைத் தொடங்கலாம் என்பதைக் கண்டறியலாம்.

உங்கள் குழந்தை ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை பிறந்திருந்தால், மூன்று வயது மழலையர் பள்ளியை எந்த ஆண்டு தொடங்குவது என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் குழந்தை மூன்று வயது மழலையர் பள்ளியை 3 வயதாகும் அதே ஆண்டில் அல்லது 4 வயதாகும் அதே ஆண்டில் தொடங்கலாம். உங்கள் குழந்தை 3 வயது நிரம்பிய ஆண்டில் மூன்று வயது மழலையர் பள்ளிக்குச் சென்றால், அவர்கள் 5 வயது ஆன ஆண்டில் பள்ளிக்குச் செல்வார்கள். உங்கள் குழந்தைக்கு 4 வயது ஆகும் ஆண்டில் மூன்று வயது மழலையர் பள்ளிக்கு அனுப்ப நீங்கள் தேர்வுசெய்தால், அவர்கள் 6 வயது ஆகும் ஆண்டில் பள்ளிக்குச் செல்வார்கள்.

மழலையர் திட்டம் ஒன்றைக் கண்டறியவும்

அங்கீகரிக்கப்பட்ட கிண்டர் திட்டங்களை வழங்கும் சேவைகளைக் கண்டறிய, பின்வரும் வலைத்தளத்திற்குச் செல்க: find a kinder program website மழலையர் பள்ளியில் ஓர் இடத்தைக் கண்டறிய, உங்கள் உள்ளூராட்சி மன்றம் மற்றும் மழலையர் பள்ளிச் சேவைகள் உங்களுக்கு உதவக்கூடும்.

'கிண்டர் டிக்'கைத் (Kinder Tick) தேடிப் பார்க்கவும்:

விக்டோரியக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட மழலையர் திட்டத்தைக் கண்டறிய 'கிண்டர் டிக்' உதவுகிறது.

உங்கள் உள்ளூர் மழலையர் பள்ளிச் சேவையில், சேவை அல்லது மையத்தின் கட்டிடம் அல்லது மைதானத்தில், அவர்களின் இணையதளத்தில் அல்லது அவர்களின் தகவல் தொடர்பான பொருள்களில் 'கிண்டர் டிக்' சின்னத்தைத் தேடிப் பார்க்கவும்.

Updated